தமிழ்நாடு

அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு மேலும் 14 செ.மீ. மழை வரவேண்டியுள்ளது. தமிழகத்தின் இதர மாவட்டங்களில் சராசரி அளவிலான மழைப் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாள்களில் மழையின் அளவு படிப்படியாக குறையக்கூடும் என்று தெரிவித்தார்.

சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த இரு நாள்களுக்கு குமரிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!

காட்டன் ஹவுஸின் ஆடிச் சலுகை

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

கிடா சண்டை நடத்திய 6 போ் கைது

SCROLL FOR NEXT