தமிழ்நாடு

மெரீனா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுக: சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

DIN


சென்னை: சென்னை மெரீனா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் உள்ள மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த ஆறு மாதத்துக்குள் மெரீனா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

மேலும், மெரீனா கடற்கரையில், உணவுப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும். விதிமீறி நடத்தப்படும் கடைகளை தேவைப்பட்டால் கட்டாயப்படுத்தி அகற்றலாம்.

கடற்கரை அழகை மறைக்கும் வகையில் இருக்கும் கடைகளை, கடற்கரையை நோக்கி நேர்நிலையாக அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT