வெங்காயம் வாங்க கடலூரை நோக்கி படையெடுக்கும் மக்கள்
நூறு முதல் நூற்று ஐம்பது வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனையான நிலையில், குறைந்த விலையில் விற்பனையாகும் வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் பலரும் கடலூருக்கு படையெடுத்துள்ளனர்.
திருப்பாதிரிப்புலியூர்: நூறு முதல் நூற்று ஐம்பது வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனையான நிலையில், குறைந்த விலையில் விற்பனையாகும் வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் பலரும் கடலூருக்கு படையெடுத்துள்ளனர்.
கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் சந்தையில் இன்று விற்பனைக்கு வந்திருக்கும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ வெறும் ரூ.25 மட்டுமே. என்ன சந்தேகமாக இருக்கிறதா? நீங்கள் சந்தேகிப்பது போல அது அழுகிப் போன வெங்காயமா அல்லது ரொம்பக் குட்டியான வெங்காயமா என்று நினைக்க வேண்டாம்.
முற்றிலும் புதிய வெங்காயம், இன்று சந்தைக்கு லாரிகளில் வந்த வெங்காயத்தின் விலை குறைந்திருப்பதால், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
திருப்பாதிரிப்புலியூர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் இருந்து விரைந்துள்ளதால், நண்பகலிலேயே, ஒட்டுமொத்த வெங்காயமும் விற்றுத் தீர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.