chennai High Court 
தமிழ்நாடு

ஐஐடி மாணவி தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

DIN

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப், விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அஸ்வத்தாமன் வழக்கு தொடர்ந்தார். 

இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், ஏற்கனவே விசாரணைக் குழுவில், சிபிஐ அதிகாரிகள் இருவர் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளதை அடுத்து, அதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

மகாத்மா மரணித்த போது...

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

SCROLL FOR NEXT