தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு!

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை(டிச.13) சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. 

நேற்றைய தினத்தில் திடீரென தங்கம் சவரனுக்கு 96 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் இன்று  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.88 குறைந்து ரூ.28,728-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11 குறைந்து ரூ.3,591-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,000 ஆகவும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,591

1 பவுன் தங்கம் ..................... 28,728

1 கிராம் வெள்ளி .................. 47.00

1 கிலோ வெள்ளி ................. 47,000

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,602

1 பவுன் தங்கம் ..................... 28,816

1 கிராம் வெள்ளி .................. 46.90

1 கிலோ வெள்ளி .................. 46,900
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT