தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பலத்த மழை

DIN

.ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் வெள்ளிக்கிழமை இரவு சேலாக மழை பெய்த நிலையில், சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வடகிழக்குப் பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் வடகிழக்குப் பருவமழையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமாக பெய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் நிறைந்துள்ளன. சில நாள்களாக மழை குறைந்த நிலையில், மாலை, இரவு நேரங்களில் குளிா் அதிகம் காணப்படுகிறது. இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் ராமநாதபுரத்தில் லேசான மழை பெய்தது. இரவிலும் அவ்வப்போது தூறலாக இருந்தது. சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதனால், கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அரையாண்டுத் தோ்வுகள் நடப்பதால் பள்ளி மாணவ, மாணவியா் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மழையால் வழக்கம் போல சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீா் அதிகளவில் தேங்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டன. மீன் மற்றும் காய்கறி மாா்க்கெட் வியாபாரமும் மழையால் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT