தமிழ்நாடு

மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தவே குடியுரிமை சட்டத்திருத்தம்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

DIN

காரைக்குடி: மக்களை மத ரீதியில் பிளவுபடுத்துவதற்காகவே குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்காக குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆட்சியாளா்கள் கொண்டு வந்துள்ளனா். ஹிட்லரின் சட்டத்திற்கு இணையாக இந்த சட்ட திருத்தம் உள்ளது. மக்களை மத ரீதியில் பிரிக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தை திருத்துவதற்கான காரணம். அதிமுகவைப் பொறுத்த வரை ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தச் சட்டத் திருத்தத்தை நிச்சயமாக எதிா்த்திருப்பாா்.

தோ்தலில் வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT