முகப்பு
தமிழ்நாடு

கோவா விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு: இந்திய கடற்படை

கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் சூரத்திலிருந்து கோவாவுக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 3568 சந்திக்க இருந்த ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
பகிர்:

பனாஜி: கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் சூரத்திலிருந்து கோவாவுக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 3568 சந்திக்க இருந்த ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்பைஸ்ஜெட் விமானம் கோவா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, ஓடுதள கட்டுப்பாட்டாளர் ரமேஷ் டிக்கா, விமானத்தின் தரையிறங்கும் கியர் இயங்கவில்லை என்பதைக் கவனித்தார்.

உடனடியாக ஓடுதள கட்டுப்பாட்டாளர், ஏடிசி கோபுரத்துக்கு எச்சரிக்கை கொடுத்து, பின்னால் வரும் விமானம் உடனடியாக கோவா விமான நிலையத்தில் தரையிறங்குவதை தவிர்த்துவிட்டு, பிறகு தரையிறங்குமாறு அறிவுறுத்தினார்.

பிறகு, ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் தரையிறங்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வியுற்றதை அடுத்து, மூன்றாவது தரையிறக்கத்தில் முன் தரையிறங்கும் கியர் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

"விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அவசர மற்றும் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →