தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டம்: தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்

DIN

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்திலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில்  கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தில்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சட்டதிருத்தத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித் கோவை வந்துள்ள நிலையில் 
மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கல்லூரியைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.

கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியைத் தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT