முகப்பு
தமிழ்நாடு

தொடர் விடுமுறை காரணமாக அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
அண்ணா பல்கலைக்கழகம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள், தொடர் விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முன்னதாக,தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்து உயர்கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டும், டிசம்பர் 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாகவும், நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.