தமிழ்நாடு

குமரியில் மழை: படகு சேவை ரத்து

DIN

கன்னியாகுமரியில் மழை காரணமாக, விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

சா்வதேச சுற்றுலாத் தலமான இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் கன்னியாகுமரி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை வெகுவாக குறைந்தது. மேலும், விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு நாள் முழுவதும் படகுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சன்னதி தெரு, காந்தி மண்டப சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT