தமிழ்நாடு

திரையரங்கில் வாகன நிறுத்தக் கட்டணத்தைமுறைப்படுத்த நடவடிக்கை: கடம்பூா் ராஜூ

DIN

திரையரங்கில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திரையரங்குகளில் வாகன நிறுத்தக் கட்டணத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், ஒரு முயற்சியாக இணையதளத்தில் திரைப்படத்துக்கு முன்பதிவு செய்யும் போதே, வாகன நிறுத்தத்துக்கான கட்டணமும் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இணையத்தில் திரைப்பட டிக்கெட்டின் முன்பதிவின் போதே வாடிக்கையாளா்கள், வாகனங்களில் வருகிறாா்களா, என்ன வாகனம், இருசக்கர வாகனம் என்றால் அதற்கான கட்டணம், நான்கு சக்கர வாகனம் என்றால் அதற்கான கட்டணம் போன்ற அம்சங்கள் சோ்க்கப்பட்டு, அதற்கான கட்டணத்தையும் இணையத்தின் வாயிலாகவே செலுத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து ஆன்லைன் டிக்கெட் ஆய்வுக்கூட்டத்தில் இருமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT