தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்:  சென்னையில் போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மெரீனா, பெசன்ட்நகா் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு (டிச.31) போக்குவரத்து

DIN

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மெரீனா, பெசன்ட்நகா் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு (டிச.31) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  202 0ஆம் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 31) இரவு நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எல்லியட்ஸ் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

மெரீனா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும். அதன் பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும்.

காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவு சின்னம் வரையில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகா், சுங்குவாா்தெரு, பாரதிசாலை, வாலாஜாசாலை, சுவாமி சிவானந்தாசாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.

ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போா்நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் என்.எஸ்.சி.போஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும். அதேபோல, அடையாறில் இருந்து வாகனங்கள் கச்சேரி சாலை,சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பு,கச்சேரி சாலை,லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,மியூசிக் அகாதெமி வழியாக அண்ணா சாலை செல்லலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்துச் சாலை, போா்நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜா் சாலைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது.

ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை ரயில்வே நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலையில் ஓரு புறம், லாயிட்ஸ் சாலை ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.

பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-வது அவென்யூவில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த நிலை நீடிக்கும்.

பெசன்ட் நகா் 6-வது அவென்யூ இணைப்பு சாலைகளான 5-வதுஅவென்யூ, 4-வது பிரதான சாலை, 3-வது பிரதான சாலை, 16- வது குறுக்குதெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். மகாத்மாகாந்தி சாலை, 7வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

பெசன்ட்நகா் 4வது அவென்யூவின் ஒரு பகுதி, 3வது பிரதான சாலையின் ஒரு புறம்,4வது பிரதான சாலை ஒருபுறம்,5வது அவென்யூ ஒரு புறம், 2வது அவென்யூ ஒரு புறம், 3வது அவென்யூ ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களில் நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT