முகப்பு
தமிழ்நாடு

அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினம்: முதல்வர் தலைமையில் அதிமுக தலைவர்கள் அஞ்சலி 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.   

Updated On : 3 பிப்ரவரி, 2019 at 11:47 AM
பகிர்:

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.   

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் கூட்டாக  அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

அவர்களுடன் அதிமுக மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதேசமயம் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள  நினைவு இல்லத்தில் சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும், மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.