தமிழ்நாடு

சுதந்திரமான அமைப்புகள் அனைத்து பாஜக ஆட்சிக்கு கட்டுப்பட்டுள்ளன: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுதந்திரமாக செயல்பட வேண்டிய அனைத்து அமைப்புகளும் பாஜக ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

DIN


சென்னை: சுதந்திரமாக செயல்பட வேண்டிய அனைத்து அமைப்புகளும் பாஜக ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க மாநில அரசை கவிழ்க்க வேண்டும் என்று மோடி - அமித் ஷா அணி சதி செய்து வருவதாகவும், சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில், சுதந்திரமாக செயல்பட வேண்டிய அனைத்து அமைப்புகளும் பாஜக ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன என்று குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT