தமிழ்நாடு

பிப்.8-இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார் கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி பிப்ரவரி 8-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

DIN


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி பிப்ரவரி 8-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
 சத்தியமூர்த்திபவனில் பிப்ரவரி  8-ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் விழாவில் அவர் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.  
நிகழ்ச்சிக்கு அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச். வசந்தகுமார்,  கே. ஜெயக்குமார்,  எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க உள்ளனர்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT