தமிழ்நாடு

முதல்வர் குறித்து அவதூறு சுவரொட்டி: வழக்குரைஞர் சங்கத் தலைவர் கைது

DIN


பொள்ளாச்சி பகுதியில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி அச்சடித்து ஒட்டியதாக வால்பாறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை அடுத்த ஜோதி நகரைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் கான் (58). வால்பாறை வழக்குரைஞர் சங்கத் தலைவராக உள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞராகவும் இருந்துள்ளார்.
திமுகவில் இருந்து விலகி அழகிரியின் ஆதரவாளராக சில காலம்  இருந்தார். தற்போது திமுகவில் இணைய முனைப்பு காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி அச்சடித்து பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு ஒட்டினாராம். மேலும், பிரசுரமும் வினியோகித்தாராம். இதையறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷாநவாஸ் கானை கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்துப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT