தமிழ்நாடு

உதகையில் மீண்டும் கடும் குளிர்

உதகையில் ஒரு மாதமாகத் தொடர்ந்து உறை பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் பெய்த பலத்த

DIN


உதகையில் ஒரு மாதமாகத் தொடர்ந்து உறை பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் பெய்த பலத்த மழையையடுத்து மீண்டும் நீர்ப் பனி கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் நகரில் மீண்டும் கடும் குளிர் நிலவுகிறது.
உதகை மாவட்டம்,  அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுமார் 2 மணி நேரம் வரை பலத்த மழை பெய்த நிலையில், சில இடங்களில் ஆலங்கட்டிகளும் விழுந்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவே நீர்ப்பனி கொட்டத் தொடங்கியது. 
இருப்பினும் குளிர் குறைவாகவே இருந்தது. ஆனால், திங்கள்கிழமை பகலில் மழையில்லாமல் மாலையிலிருந்தே நீர்ப்பனி கொட்டத் தொடங்கியதால் இரவில் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக, உறைபனி கொட்டாவிட்டாலும் உதகையில் பனிக்காலம் மேலும் நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT