சுழலும் சூரிய பிரபையில் வீதியுலா வந்த சக்கரபாணி சுவாமி. 
தமிழ்நாடு

97 ஆண்டுகளுக்குப் பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா

கும்பகோணத்தில் 97 ஆண்டுகளுக்குப் பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


கும்பகோணத்தில் 97 ஆண்டுகளுக்குப் பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சூரியன் தெற்கு நோக்கிய தனது தட்சிணாயன பயணத்தை முடித்துக் கொண்டு, வடக்கு நோக்கி உத்தராயண பயணத்தை தை மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் தொடங்கும் நாளே ரத சப்தமி.
இந்த நாளில் சூரியனால் நிர்மாணிக்கப்பட்டு, சூரியன் அனுதினமும் வழிபாடு செய்ய ஏதுவாக தட்சணாயணம், உத்தராயணம் என இரு வாசல்களைக் கொண்டிருப்பதும், சூரியனின் திருப்பெயராலாயே பாஸ்கர ஷேத்திரம் என சிறப்பு பெயரால் அழைக்கப்படுவதுமான கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி வீதியுலா நடைபெறுவது வழக்கம். அப்போது, சக்கரபாணி சுவாமியை பட்டறையில் வைத்து வீதியுலா செல்வது வழக்கம்.
ஆனால், 97 ஆண்டுகளுக்கு முன்பு சக்கரபாணி சுவாமி சுழலும் சூரிய பிரபையில் வீதியுலா வந்துள்ளார். அதன்பிறகு அந்த சுழலும் சூரிய பிரபை சிதிலமடைந்ததால், அந்த வீதியுலா நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து கோயில் தேர் கட்டுமான ஸ்தபதி செல்வம் தலைமையில் சுழலும் சூரிய பிரபை நிகழாண்டு சீர்செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரத சப்தமி நாளான செவ்வாய்க்கிழமை காலை  97 ஆண்டுகளுக்கு பிறகு, காலை 7 மணிக்கு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரபாணி சுவாமியை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT