தமிழ்நாடு

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை: அமைச்சர் மணிகண்டன்

DIN


டிக் -டாக் செயலிக்குத் தடை விதிக்க தமிழக  அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:
டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்
படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்திரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்றார்.
அப்போது, அமைச்சர் மணிகண்டன் எழுந்து கூறியது:
டிக்-டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்பது உண்மைதான். இது தொடர்பாக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர்.  புளுவேல் கேம்க்கு தடை விதித்ததுபோல மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, டிக் - டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT