தமிழ்நாடு

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல்: மு.க. ஸ்டாலின் கண்டனம்

DIN


காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக, மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

"அவந்திபூராவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அதேசமயம், நாட்டுக்காக சேவையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் திமுக உறுதியாக துணை நிற்கிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT