தமிழ்நாடு

காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல் கோழைத்தனமானது: ஸ்டாலின் கண்டனம்

DIN


சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 44 வீரர்கள் பலியாகினர். இந்தத் தற்கொலைத் தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்தது கண்டனத்திற்குரியது. கோழைத்தனமானது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். 

கடந்த 2016-ஆம் ஆண்டில் உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்டுள்ள மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT