தமிழ்நாடு

தை மாதத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு: பரிசீலித்து முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது குறித்து அரசு பரிசீலித்து உரிய  முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலமுருகன்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
பழங்காநத்தம் ஊர்காவலன் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, பிப். 25-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திய விழாக் குழுவினருக்கும், நிகழாண்டில் நடத்த உள்ள விழாக் குழுவினருக்கும் இடையே சில பிரச்னைகள் உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவில் பரிசுப் பொருள்கள் மற்றும் பண வசூலில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே,  நீதிமன்றம் சிறப்பு குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர்  அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினால் போலீஸாருக்கும்,  வருவாய்த் துறைக்கும் வேறு பணிகள் இல்லையா என கேள்வி எழுப்பியதோடு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்த வேண்டும் என்பது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 மேலும்,  இதுகுறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப். 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT