தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம்: அரசின் உத்தரவுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர்

DIN


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அரசின் உத்தரவுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர்கள் சிறப்பான வாதத்தை எடுத்து வைத்தனர். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் ஆலை மூடப்பட்டுள்ளதால், அதற்குத் தடை விதிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்ற வழக்குரைஞர்களின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆலை மூடப்பட்டுதான் இருக்கும். அதுவே அரசின் முடிவு. ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாடும்பட்சத்தில் அங்கும் வலுவான வாதங்களையும், சட்ட நுணுக்கங்களையும் எடுத்து வைத்து, தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும்.
மக்களுடைய கோரிக்கையை ஏற்றுதான் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இனி அச்சமின்றி இருக்கலாம். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்படும். தீர்ப்பை எதிர்பார்த்து கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது நிலைமையைக் கண்காணித்து போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT