தமிழ்நாடு

அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்: கட்சியின் முதல் ஆண்டில் கமல் முழக்கம்

DIN

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த கட்சியினர் மத்தியில் பேசுகையில்,  

தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் எனும் குடும்பம் பரவியுள்ளது. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது. பெண்கள் ஆற்றும் உதவி, வியத்தகு உதவி. நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன, குறுகிய நாட்களே உள்ளன. தமிழகம் முழுவதும் கட்சிக் கொடி ஏற்றிவைக்கும் இலக்கை நோக்கி பயணிப்போம். குளத்து மீனாக இருந்த மக்கள் இன்று வெளியே வந்துள்ளனர். 

அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, குளம் வேறு நதி வேறு கிடையாது. அப்போது குளத்து மீன் ஆற்று மீனாக மாறும், அதன் அடையாளம் தான் இது. 

தனியாக நிற்போம் என்று சொன்னது கிடையாது. நாம் என்றபோதே தனிமை நீங்கிவிட்டது. மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன். மக்கள் என் கையை விடித்து நாடி பார்த்து, புத்துயில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் வைத்தியர்கள் இல்லை, வருங்கலாத்தை கணிக்கும் ஜோதிடர்கள். 

எதிர்காலத்தின் கனவு உடையவர்கள் பலர், நான் வரவேண்டும் என்று ஆசிர்வதித்து உள்ளனர். நான் பேசுவது புரியவில்லை என நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் புரியக் கூடாது என்ற பிரார்த்தனையில் இருப்பவர்கள். ஆனால், இன்று அவர்களுக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. காரணம் என் குரலை உயர்த்தியிருக்கிறேன். 

அதிகம் என்றால் அதிகப் பிரசங்கம் கிடையாது, இன்று முதல் நியாயமான பிசங்கங்கள் அதிகரிக்கும். தமிழகத்தையும், தமிழகத்தில் நடக்கும் ஊழலையும் உலகம் கவனித்துக்கொண்டு இருக்கிறது. என் அமைப்பு தயாராகிவிட்டதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வேண்டுமென்றால் அவர்கள் மோதிப் பார்க்கட்டும். மக்கள் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் துவக்கினார். இதன் முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கு வியாழக்கிழமை பிற்பகல் மீன்பிடி வலைகளை கமல்ஹாசன் வழங்குறார்.

இதையடுத்து திருவாரூரில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் 24-ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ள மற்றொரு பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT