தமிழ்நாடு

மோடி மீண்டும் பிரதமராவது பாஜகவை விட நாட்டுக்குத்தான் மிகவும் முக்கியம்: அமித் ஷா

DIN


ராமநாதபுரம்: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது பாஜகவை விட, பாரதத் தேசத்துக்குத்தான் மிகவும் முக்கியம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

ராமநாதபுரத்தில் தேர்தல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடனான கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியனும், சிவச்சந்திரனும் நாட்டுக்காக தனது இன்னுயிரைத் தியாகம்செய்துள்ளனர். பிரதமர் மோடி அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்.

ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்தவர்கள்தான் திமுக-காங்கிரஸ் கட்சியும். மிகப்பெரிய அளவில் ஊழல் செய்யக் கூடியவர்களால் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்ய முடியுமா? 

5 தொகுதிகளில் அல்ல 40 தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற முழு சக்தியோடு பணியாற்ற வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும். 

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள்  செய்த தியாகம் ஒருபோதும் வீண்போகாது என்று பேசினார் அமித் ஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT