தமிழ்நாடு

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது உண்மைதான்: மணப்பாறையில் தம்பிதுரை பேட்டி

DIN


மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது உண்மைதான் என்று மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார்.

மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக இணைந்திருக்கும் நிலையில், ஏற்கனவே மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கருத்துக் கூறிய தம்பிதுரை, தற்போது கூட்டணியில் இணைந்த நிலையில் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தின் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்ததாலேயே மத்தியில் பாஜக ஆட்சி காலத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு நலத்திட்டங்கள், நிதி கிடைக்கும் என்பதற்காகவே கூட்டணி வைத்துள்ளோம்.

காலத்துக்கு ஏற்ப தேர்தல் நேரத்தில் கூட்ணி வைப்பது வழக்கமான ஒன்றுதான். திமுக - காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைப்பது அவசியம். தமிழகத்தின் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT