தமிழ்நாடு

வாரிசு அரசியல் கூடாது: கமல்ஹாசன்

DIN

தொழிலில் வாரிசு வந்தால் தவறில்லை. ஆனால், அரசியலில் வாரிசு இருக்கக் கூடாது என்றார்  மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
கடந்த ஆண்டில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல்  கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்ட  பொதுக்கூட்டத்தில்  பங்கேற்க சென்றபோது,  சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர்அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் யார், யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்பது இறுதி செய்யப் பட்டவுடன், அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க முடியும்.  ஒத்த கருத்துடைய கட்சிகள் நிறைய உள்ளன. தமிழகத்தின் முன்னேற்றத்தில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. வேறு எந்தத் தொழிலிலும் வாரிசு வந்தால் தவறு கிடையாது. ஆனால், அரசியலில் அப்படி இருக்கக் கூடாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT