தமிழ்நாடு

மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா?: உயர் நீதிமன்றக்   கிளை கேள்வி 

வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

மதுரை: வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்தி வைக்க கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது:

மதுக்கடைகளில் வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக் கூடாது?;  டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதை மட்டும் வைத்துக்கொள்ளலாமே?

இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் இந்த வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-ல் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT