தமிழ்நாடு

போகியை நினைத்து பயப்படும் சென்னை விமான நிலையம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே காலை வேளைகளில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் குறைந்த தூரத்துக்கே தெளிவாக பார்க்கும் நிலை இருந்து வருகிறது.

ENS


சென்னை: பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே காலை வேளைகளில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் குறைந்த தூரத்துக்கே தெளிவாக பார்க்கும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை நினைத்து, விமான நிலைய அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது காலையில் இயக்கப்படும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த ஆண்டும் அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதால், காலையில் இயக்கப்படும் விமானங்களின் நேரத்தை ஒரு சில நாட்களுக்கு மாற்றியமைக்கும் திட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் போகிப் பண்டிகையின் போது விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை விமான நிலையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT