தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது  

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

DIN

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் நெடுந்தீவுக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,  இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி அவர்களை இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது. 

அவர்களிடம் இருந்து படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

கைது செய்யபட்ட மீனவர்கள் விரைவில் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!!

சேலத்தில் விஜய் பிரசாரம்! நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

SCROLL FOR NEXT