தமிழ்நாடு

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

DIN


சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து 8வது நாளாக இன்றும் (ஜன.18) அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று வியாழக்கிழமை (ஜன.17) ரூ. 73.15-ஆக இருந்த பெட்ரோல் விலை லிட்டருக்கு 08 காசுகள் அதிகரித்து இன்று வெள்ளிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.23 ஆகவும், ரூ. 68.42 ஆக இருந்த டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.68.62-க்கும் விற்பனையாகி வருகிறது. 

கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07 ஆக இருந்தது. இப்போது ஒரு லிட்டருக்கு ரூ.2.016 அதிகரித்துள்ளது. டீசலைப் பொறுத்தவரையில் 5 நாள்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.66.01 ஆக இருந்தது. இப்போது ரூ.2.061 அதிகரித்துவிட்டது.

கடந்த ஒன்றரை மாதமாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது மீண்டும் தொடர்ந்து 8வது நாளாத அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT