தமிழ்நாடு

பொங்கல் பரிசு தந்ததற்காக எங்கள் மீது வீண் பழி: முதல்வர் பழனிசாமி

DIN

அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கிய காரணத்துக்காக எங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதையடுத்து மதுரை பாண்டிகோவில் சுற்றுசாலை பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கிய காரணத்துக்காக எங்கள் மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துகிறார்கள். அரசையும், கட்சியையும் காப்பாற்ற தொண்டர்களும், பொதுமக்களும் துணை நிற்பார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT