தமிழ்நாடு

ஜே.இ.இ. தேர்வு முடிவு வெளியீடு: தமிழக மாணவர் 99.99 சதவீத மதிப்பெண்

DIN


ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கௌரவ் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படும். 
இதில் முதல்நிலைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் அண்மையில் நடத்தப்பட்டது. முதன் முறையாக முழுவதும் ஆன்-லைன் முறையில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. 
இதில் அகில இந்திய அளவில் 15 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த கௌரவ் 99.99 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதல் மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு வரும் மே மாதத்தில் சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT