தமிழ்நாடு

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. அச்சமடைந்து வரும் அனைத்து தரப்பு மக்கள்..!

DIN


சென்னை: கடந்த ஒன்றரை மாதமாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கலக்கமடைய வைத்துள்ளது. 

எரிபொருள் விலை உயர்வு அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது. லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறி உள்ளிட்ட பொருள்களை எடுத்து வரும் செலவு அதிகரிப்பதைக் காரணம் காட்டி அவற்றின் விலை உயர்த்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அதே மாதம் 17-ஆம் தேதி டீசல் விலை உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. 

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது. 

கடந்த 10 ஆம் தேதி முதல் ஏறுமுகத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தநிலையில், நேற்று திங்கள்கிழமை (ஜன.21) விலையில் இருந்து, இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து ரூ.73.99 ஆகவும், டீசல் 21 காசுகள் அதிகரித்து ரூ.69.62 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலையில் இருந்து பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சற்று இறங்கு முகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது, மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் அச்சமடைய வைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT