முகப்பு
தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி 2019, 1:38 am IST
பகிர்:


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை புதன்கிழமை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் சந்திரன் (35), வீட்டின் அருகில் வசிக்கும் 16 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், தங்கவேலுவின் வீட்டில் அவரது நண்பர் நாகசாமி தங்கியிருந்தபோது, நாகசாமியும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி லைப்லைன் டிரஸ்டில் அடைக்கலமானார். இதையடுத்து, சந்திரன் மீது சிறுமி அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், முதல் குற்றவாளி சந்திரனுக்கு ரூ. 35 ஆயிரம் அபராதமும், 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.