தமிழ்நாடு

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் நீதிமன்றம் கேட்ட தடாலடிக் கேள்வி

DIN

மதுரை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா? ரத்து செய்வதற்கு முன் அனுமதி பெற்றதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக ரத்து செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில், அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இல்லை. மத்திய அரசுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுசிதரன், ஆதிகேசவலு ஆகியோர், இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்துக்கு  கேள்விகளை எழுப்பி அது குறித்து 30ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT