முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும்: மின்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் மூலம் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணிதெரிவித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் மூலம் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி
தெரிவித்துள்ளார். 

விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, கடந்த 2 ஆண்டுகளில் 19 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 11 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் வழங்கப்படும் என்று இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.