முகப்பு
தமிழ்நாடு

முதல்வரைச் சந்தித்த மற்றொரு அதிமுக அதிருப்தி எம்எல்ஏ: கரையும் டிடிவி கூடாரம் 

அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான விருத்தாசலம் கலைச்செல்வன் புதன் மாலை முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

தமிழ்நாடு

முதல்வரைச் சந்தித்த மற்றொரு அதிமுக அதிருப்தி எம்எல்ஏ: கரையும் டிடிவி கூடாரம் 

அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான விருத்தாசலம் கலைச்செல்வன் புதன் மாலை முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான விருத்தாசலம் கலைச்செல்வன் புதன் மாலை முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

விருத்தாசலம் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலைச்செல்வன் அதிமுக - அமமுக இடையேயான பிரச்சினையில் இவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற 22 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து இதுவரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் முகாம் மாறத் துவங்கினர்.

முதல்கட்டமாக தங்க தமிழ்செல்வன் ஞாயிறன்று திமுகவில் சேர்ந்தார். செவ்வாயன்று  காலை தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவரும்,  அமமுக அமைப்புச் செயலாளராக இருந்தவருமான இசக்கி சுப்பையா வரும் 6-ஆம் தேதி அதிமுகவில் சேரப்போவதாக அறிவித்தார்.

செவ்வாய் மாலை அதிமுக அதிருப்தி எம்எல்ஏகளில் ஒருவரான அறந்தாங்கி ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இதையடுத்து அவர் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலையும் சந்தித்தார்.  

இந்நிலையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான விருத்தாசலம் கலைச்செல்வன் புதன் மாலை முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக  செயல்பட்டதன் காரணமாக, அதிமுக கொறடா ராஜேந்திரன் வேண்டுகோளின்படி கடந்த மே மாதம் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →