தமிழ்நாடு

ஆறு மாத பரோலுக்கு அரசு எதிர்ப்பு: நளினிக்கு 1 மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு முறையில் அதிகபட்சமாக 30 நாட்கள்தான் பரோல் வழங்க முடியும் என்று தமிழக அரசு வாதத்தை ஏற்று, ஆறு மாத பரோலுக்கு விண்ணப்பித்த நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள மகளுடைய திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாத பரோல் கேட்டிருந்த நிலையில், ஒரு முறைக்கு 30 நாட்களுக்கு மட்டுமே பரோல் வழங்க முடியும் என்ற அரசின் வாதத்தை ஏற்று, நளினிக்கு 1 மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய 6 மாத பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீது நளினி நேரில் ஆஜராகி வாதிட வைத்த கோரிக்கையை ஏற்று, நீதிமன்ற உத்தரவின்படி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

6 மாத பரோல் தர முடியாது என்று அரசு தரப்பும், மகளின் திருமணத்தை நடத்த 6 மாத பரோல் கேட்டு நளினி தரப்பும் தத்தமது வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT