தமிழ்நாடு

அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

DIN


சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அதிமுக போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களுக்கு கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

அதன்படி, முன்னாள் அமைச்சர், சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் அ. முஹம்மத் ஜான், மேட்டூர் நகரக் கழகச் செயலாளர் என். சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, பாமகவுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்வதாக அதிமுக அறிக்கை தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT