தமிழ்நாடு

டான்செட் தேர்வு முடிவு வெளியீடு: மதிப்பெண் சான்றிதழை நாளை பதிவிறக்கம் செய்யலாம்

DIN


முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ.  சேர்க்கைக்கான டான்செட் தகுதித் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
முடிவுகளை annauniv.edu/tancet 2019       என்ற  இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.  சேர்க்கைக்கான டான்செட் தகுதித் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் நடத்தியது.
இதில், எம்பிஏ படிப்பில் சேர 21,743 பேர், எம்.சி.ஏ. படிப்பில் சேர 6,004 பேர், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர 14,193 பேர் என மொத்தம் 41,940 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் எம்பிஏ சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் 16,473 பேரும், எம்சிஏ படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் 4,674 பேரும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களில்  10,374  பேரும் என மொத்தம் 31,521 பேர் தகுதித் தேர்வை எழுதினர்.
இவர்களுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து புதன்கிழமை (ஜூலை 10)  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT