தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு மாநிலங்களவைப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

DIN


சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு மாநிலங்களவைப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற மாநிலங்களவை உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளனர்.

அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட முகம்மது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுகவின் சார்பில் போட்டியிட்ட  தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்குரைஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற வைகோ, வில்சன், சண்முகம் ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளனர். வெற்றிச் சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவைச் செயலாளருமான சீனிவாசனிடம் இருந்து வெற்றியாளர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT