தமிழ்நாடு

காமராஜர் பிறந்த நாள்: அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை -15 இல்கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

DIN


முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  அன்றைய தினம் காமராஜரை நினைவுகூரும் வகையில் பேச்சு,  கட்டுரை,  கவிதை,  ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். 
அதன்படி,  இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  
அதில் திங்கள்கிழமை காலை காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், அவர் கல்விக்கு செய்த தொண்டு குறித்து மாணவர்களிடையே சொற்பொழிவு நடத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT