தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டெருமைகள்

DIN


குன்னூர் அருகே ட்ரூக் தனியார் தேயிலை எஸ்டேட் பகுதியில் வியாழக்கிழமை காட்டெருமைகள் புகுந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக ட்ரூக் பகுதியில் தனியார் எஸ்டேட்கள் உள்ளன. வனத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.  வியாழக்கிழமை காலையில் ட்ரூக்  எஸ்டேட் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் கூட்டமாக  தேயிலைத் தோட்டத்தில் உலா வந்தன. இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பணியை நிறுத்திவிட்டு வெளியேறினர்.  காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் தொழிலாளர்கள் மீண்டும் பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT