தமிழ்நாடு

இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடாது: டிடிவி. தினகரன்

DIN


 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மட்டுமின்றி,  நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் அமமுக போட்டியிடாது என அந்தக் கட்சியின் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம்  கூறியது:  அமமுகவை கட்சியாகப் பதிவு செய்து, நிரந்தர சின்னம் பெறுவதற்கான பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இதனால், வேலூர் மக்களவைத்  தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்திருந்தோம். இப்போது, நாங்குநேரி,  விக்கிரவாண்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அமமுக போட்டியிடாது.
ஒவ்வொரு தேர்தல்களிலும் தனித்தனி சின்னங்களில் போட்டியிடும் நிலை உருவாகும்.  இதன் காரணமாகவே இந்தத் தேர்தல்களில் போட்டியில்லை. கட்சியை பதிவு செய்தவுடன் அதன் பிறகு வரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம்.
நிறுத்துவதாகக்கூறிய திட்டங்கள் மீண்டும் நிறைவேற்றம்: அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலின்போது,  ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றமாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.  ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, தற்போது எட்டுவழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம் என தமிழக முதல்வர் கூறுகிறார். இதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். 
அமமுகவுக்கு  பாதிப்பில்லை: அமமுகவில் இருந்து ஒரு சிலர் தங்களின் சுயலாபத்துக்காக விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துள்ளனர். இதனால் எங்கள் கட்சியின் வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இல்லை. இதனை வருங்காலத்தில் அறிய முடியும் என்றார் அவர்.
முன்னதாக, பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் காமராஜரின் 116-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், துணைப் பொதுச் செயலர் பி.பழனியப்பன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலர் ஆர்.முருகன், கொள்கை பரப்பு செயலர் சி.ஆர்.சரஸ்வதி,  மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT