தமிழ்நாடு

காணாமல்போன மீனவர்கள்: மத்திய, மாநில அரசுகள்  அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN


ஜூலை 4-இல் கடலுக்குச் சென்று காணாமல்போன இரண்டு  மீனவர்களை கண்டு பிடிக்கக் கோரிய வழக்கில்,  அவர்களின் நிலை குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த ஆரோக்கியசாமி  தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பல மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது காணாமல் போகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு எவ்வித நடவடிக்கையும் முறையாக எடுப்பதில்லை. அந்த வகையில், இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அதுமட்டுமின்றி  581 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.1500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 
இந்நிலையில், ஜூலை 4-ஆம் தேதி எனது உறவினர்கள் 4 பேர் பாம்பன் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை திரும்பவில்லை.  பின்னர் அவர்களில் இருவர் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே கரை சேர்ந்தது தெரிய வந்தது. ஆனால் எஞ்சிய 2 மீனவர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.  காணாமல்போன 2 மீனவர்களை மீட்டு தரக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். ஆனால்,  அதிகாரிகள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே காணாமல்போன 2 மீனவர்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில்  திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மீனவர்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கையை   தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT