தமிழ்நாடு

1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூபாய் 10 கோடி ஒதுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

DIN

1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூபாய் 10 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது,
1. இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.
2. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டு திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கூறி அமைகிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT