தமிழ்நாடு

தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 

தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்று தமிழக பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்று தமிழக பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிப்பது இல்லை. ஆனால் அதற்காக அந்தப் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை.அவற்றை நூலகங்களாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம். அங்குள்ள ஆசிரியர்களே நூலகர்களாகச் செயல்படுவார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.    

இவ்வாறு  தெரிவித்திருந்தார்.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக அந்தப் பள்ளிகளை மூடும் முயற்சிகள் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT