தமிழ்நாடு

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

DIN

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 
110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி என மத்திய அரசு வெறுப்பு அரசியலை வளர்க்கிறது. 

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே எங்களது நிலைப்பாடு. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எந்த நிலையில் உள்ளது எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7 பேரின் விடுதலை தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. 

இந்த விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். சட்டப்பேரவை நடவடிக்கையில் சரிபாதி காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT